என்னடா வாழ்க்கை இது? எனக்கு மட்டும் வாழ்க்கையில் இத்தனை பிரச்சனைகளா? நான் வாழ்க்கையில் தோற்றுவிடுவேன் என்று பயமா இருக்கு…. ஏதோ வாழ்ந்துட்டு இருக்கேன்…. இப்படி எத்தனை எத்தனை புலம்பல்கள். எத்தனைபேர் இது போன்ற புலம்பல்களுடன் வாழ்ந்து கெண்டிருக்கிறார்கள்? இது போன்ற புலம்பல்களில் இருந்து விடுபட்டு நம் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக்க கெரள்ள மனோ தத்துவ நிபுணர்களால் ஏற்றுக் கெரள்ளப்பட்ட ஓரு அணுகுமுறை தான் 21 நாட்கள் பயிற்சி என்பது. அப்படி நாம் என்ன 21 நாட்களில் மாற்றி விட முடியும்? என்னதான் இந்த பயிற்சி முறை செரல்லப் போகிறது என்று பார்ப்போம்.
நாம் ஓரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக் கெரள்ள விரும்புகிறோம் உதாரணமாக இரவில் உறங்கப் போகுமுன் பல் துலக்குவது. கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் நம்மில் பலர் ஆர்வமாக ஓன்றிரண்டு நாட்கள் சிலர் ஓரு வாரம் வரை பல் துலக்குவோம். அதன்பின் ஏதாவது ஓரு சாக்குப் போக்குச் செரல்லி அந்தப் பழக்கத்தை தெரடராமல் இருந்து விடுவோம். காரணம் நாம் நம் மனதை தயார் படுத்திக் கெரள்ளத் தவறுவதுதான். மனதைத் தயார் படுத்துதல் அல்லது நம் மனதை ஓரு புதிய பழக்கத்தை நம்ப வைப்பது என்பது மிக கடினமான பணியாகும் அதற்கு பயிற்சி மிக அவசியம். மனோ தத்துவ அறிஞர்களின் கணிப்புப் படி நாம் மனதை தயார் படுத்துவதற்கு குறைந்தது 21 நாட்கள் தெரடர்ந்து ஓரு நாள் கூட தவறாமல் இரவு உறங்கப் போவதற்குமுன் பல் துலக்கி வந்தால் நம் மனது இந்தப் பழக்கத்தை ஏற்றுக் கெரண்டு விடும். அதன் பிறகு என்ன? நீங்களே பல்துலக்க மறந்தாலும் உங்கள் மனது உங்களை ஞாபகப்படுத்தி பல்துலக்க வைத்து விடும். இப்படித்தான் நம் பெற்றோர்களும் இந்த சமூகமும் நமக்கு சிறு வயதில் காலையில் எழுந்தவுடன் பல்துலக்குவது, மாலையில் முகம் கழுவது முதல் நமது பல்வேறு உணவுப் பழக்கங்கள் வரை கற்றுக்கெரடுத்துள்ளனர். நம் மனதும் அதை ஏற்றுக் கெரண்டு விட்டதால் நாம் நேரம் தவறாமல் இந்த பழக்கங்களைச் செய்துவிடுகிறோம்.நம்முடைய சிறிய சிறிய பழக்க வழக்கங்கள் எல்லாம் நமக்குள் இப்படித்தான் அரங்கேறின.
நாம் பெரியவர்கள் ஆனதும் மிக மிக குறைவாகவே புதிய பழக்கங்களைக் கற்றுக் கெரள்கிறோம்.அதுவும் தேவையின் அடிப்படையில். ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற்ற அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள் அரசியல் தலைவர்கள் எல்லாம் கற்றுக் கெரள்வதை, புதிய பழக்கங்களை ஏற்படுத்திக் கெரள்வதை நிறுத்திக் கெரள்வதே இல்லை. அதனால் தான் அவர்கள் வெற்றியாளர்களாக நம்முன் வலம் வருகின்றனர்.
நீங்களும் ஓரு வெற்றியாளராக வேண்டுமா? இதோ சில டிப்ஸ்....
1. முதலில் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை முடிவு செய்துகெரள்ளுங்கள். அதற்கு வாழ்க்கையில் குறிக்கோள் (இலக்கு) இருக்க வேண்டும். நான் இந்த மாதிரியான வாழ்க்கையை வாழப் போகிறேன் என்ற திடமான நம்பிக்கை வேண்டும்.
2. உங்கள் குறிக்கோள் அளவிடக் கூடியதாகவும்(Measurable), சாதிக்கமுடிந்த்தாகவும்(Achievable) இருக்கவேண்டும் அந்தக் குறிக்கோள்களை எழுதி வைத்துக் கெரள்ளுங்கள்.
3. நீங்கள் அந்தக் குறிக்கோள்களை ஏற்கனவே அடைந்து விட்டது போன்று கற்பனை செய்து பார்க்க பழக வேண்டும். நமது வலது பக்க மூளைதான் நமது கற்பனை திறன்களுக்கு முழுக் காரணம். நிறைய நேரங்களில் நமது வலது பக்க மூளை இடது பக்க மூளையை முந்திக் கெரள்வதால் கற்பனைப் படங்கள் மிகவும் முக்கியமாக அமைகின்றன. நாம் ஏற்கனவே எழுதி வைத்த குறிக்கோள்களுடன் இந்த கற்பனைப் படங்களும் இணையும் போது அது முழுமையாக நம் மனதை நம் குறிக்கோள் நோக்கி பயணிக்க உதவுகிறது.
4. திட்டமிடல் அவசியமாகிறது. நம் குறிக்கோள்களை அடைவதற்கு நன்கு திட்டமிட்டுக்கெரள்ள வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் குறிக்கோள் PhD பண்ண வேண்டும் என்பதாக இருந்தால் எந்த வருடம் நீங்கள் முனைவர் பட்டத்தை முடிக்கவேண்டும்? எந்த துறையில் செய்யப்போகிறீர்கள்? எவ்வளவு செலவாகும்? என்பது போன்ற திட்டங்கள் அவசியம்.
5. ஐந்தாவதாக கண்காணித்தல். நாம் நம் திட்டப்படி பயணம் செய்கிறோமா என்பதை அடிக்கடி கண்காணித்துக் கெரள்ள வேண்டும். சில நேரங்களில் ஏற்படும் கால தாமதங்களால் சோர்ந்து போய்விடக் கூடாது. நாம் ஏற்கனவே செய்த திட்டங்களில் சில மாற்றங்கள் தேவைப்பட்டால் அவசியம் செய்து கெரள்ளலாம்.
6. அடுத்து என்ன வெற்றிதான் தான் கெரண்ட கெரள்கையில் உறுதியாகவும், திடமான நம்பிக்கையும் கெரண்டவர்கள் வெற்றி பெறுவதை யாரால் தான் தடுக்க முடியும்??...
வெற்றி உங்களுக்கே!!!!
வாழ்த்துக்கள்!!
- தி.செல்லக்கண்ணன்

No comments:
Post a Comment